
வங்கியில் கடன் பெற்ற அனைவருக்கும் ஆறு மாத “மோரட்டோரியம்“ சலுகை வழங்கப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் குறிப்பிட்டார்.
குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினர், நடுத்தர வருமானம் பெறும் எம்40 தரப்பினர் உயர் வருமானம் பெறும் டி20 தரப்பினர், சிறு தொழில் முனைவோர் என பாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் இந்த சலுகை வழங்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.



