
நோய்த்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 1 கோடியே 26 லட்சம் ஊழியர் சேம நிதி வாரிய (இ.பி.எஃப்.) உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து 5,000 வெள்ளி வரை மீட்க அனுமதி வழங்கப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார்
ஐ-சித்ரா திட்டத்தின் வாயிலாக இந்த பணத்தை மீட்க அனுமதி வழங்கப்படுகிறது.
இபிஎப் சந்தாதாரர்கள் சேமிப்புத் தொகையை பொறுத்து மாதம் 1,000 வெள்ளி வீதம் ஐந்து மாதங்களுக்கு பணத்தை மீட்கலாம்.
ஜூலை 16ஆம் தேதி தொடங்கி http://icitra.kwsp.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக இதற்கான விண்ணப்பங்களைச் செய்யலாம்.
முதல் தொகை வரும் ஆகஸ்டு மாதம் உறுப்பினர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தங்கள் அன்றாட தேவைக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக இந்த ஐ-சித்ரா திட்டத்தின் கீழ் 3,000 கோடி வெள்ளி மக்களுக்கு வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.



