
சிலாங்கூர் மாநில மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு 20,000 தடுப்பூசிகளே உள்ளன என்று ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சத்திய மரியா தெரிவித்தார்
தடுப்பூசிகள் உரிய நேரத்தில் வந்த சேராத பட்சத்தில் சிலாங்கூரில் உள்ள சில தடுப்பூசி செலுத்தும் மையங்கள் தற்காலிகமாக மூடப்படும் சூழல் ஏற்படலாம்.
தற்போதைக்கு மாநில அரசின் வசம் 20,000 தடுப்பூசிகள் மட்டுமே உள்ளதாவும் புதிதாக தடுப்பூசிகள் விநியோகிக்கப்படாவிட்டால் சில தடுப்பூசி செலுத்தும் மையங்களை மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பூசி பணிக்குழுவின் கீழுள்ள தடுப்பூசி மையங்கள் 87,616 தடுப்பூசிகளை செலுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
தற்போது தினசரி 50,000 பேருக்கு முதலாவது தடுப்பூசியும் 20,000 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
இருப்பினும் தற்போது நம்மிடம் 20,000 தடுப்பூசிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. தடுப்பூசிகள் வந்து சேராவிட்டால் சில தடுப்பூசி செலுத்தும் மையங்களை மூடித்தான் ஆக வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.
தடுப்பூசி விநியோகம் தொடர்பில் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் வெளியிட்டிருந்த தகவலுக்கு பதிலடியாக டாக்டர் சித்தி மரியா பதிலடி கொடுத்தார்.



