25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஜெர்மனியில் இருக்கும் கணேஸ்வரணை கைது செய்ய இன்டர்போலிடம் புக்கிட் அமான் புதிய விண்ணப்பம்

🔥 Views : 6
👁 Reading Now : 25

தடுப்பூசி விவகாரத்தை இனத்துவேசத்தோடு தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ஜெர்மனியில் தங்கி இருக்கும் கணேஸ்வரன் கைது செய்ய புக்கிட் அமான் இன்டர்போலிடம் புதிய விண்ணப்பத்தை செய்திருப்பதாக புக்கிட் அமான் குற்றவியல் விசாரணை துறை இயக்குனர் டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில் குறிப்பிட்டார்.
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சினோவோக் தடுப்பூசி மற்றும் முஸ்லிம் மக்களுக்கு பைசர் தடுப்பூசியும் போட படுவதாக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். மேலும் அரசு அமைப்பு மற்றும் மலேசிய அரசாங்கத்தை சிறுமைப் படுத்தும் வகையில் அவர் சமூக வலைத்தளங்களில் பேசி இருக்கிறார்.
கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அவரை கைது செய்ய இன்டர்போலிடம் செய்திருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு எதிராக இன்டர்போலிடம் புதிய விண்ணப்பம் செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles