
நோய்த்தொற்று தாக்கத்தினால் சிரமத்தை எதிர்நோக்கி இருக்கும் மக்கள் தங்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை என்றால் தங்கள் வீடுகளில் வெள்ளைக் கொடியை பறக்க விடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதை பார்க்கும் அந்த வட்டார மக்கள் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள்.
இந்த வெள்ளைக் கொடியை பறக்க விடும் இயக்கத்துக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
சிரமத்தில் இருக்கும்போது ஒரு கடினமான முடிவை எடுத்து விடாதீர்கள் கஷ்டத்தை வெளியே சொல்ல கூச்சம்படும் மக்கள் எதற்கும் படவேண்டாம்.
வீட்டின் முன் வெள்ளை கொடியை பறக்க விடுங்கள்.நிச்சயம் மலேசியர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



