28.8 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

கோம்பாக் வாக்காளர்கள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்வதில் அஸ்மின் அலி தோல்வி!

🔥 Views : 8
👁 Reading Now : 67

தனக்கு எதிராக கோம்பாக் வாக்காளர்கள் பத்துபேர் தொடுத்த வழக்கு மனுவை தள்ளுபடி செய்யும் முயற்சியில் அஸ்மின் அலி தோல்வி கண்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் வாக்களித்த அஸ்மின் அலியை வெற்றி பெற செய்த பத்து வாக்காளர்கள் அவருக்கு எதிராக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.. தங்கள் பக்கத்தான் ஹரப்பன் கூட்டணிக்கு தான் வாக்களித்தோம் ஆனால் எங்கள் வாக்குகளில் வெற்றி பெற்ற அஸ்மின் அலி அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவளித்து பக்காத்தான் ஆட்சி கவிழ காரணகர்த்தாவாக இருந்தார்.
மேலும்
வாக்காளித்த மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் எனக்கோரி அவர்கள் வழக்கு தொடுத்துள்ளார்.
இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அஸ்மின் அலி தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த கோரிக்கையை நீதிபதி அத்தார் தாஹிர் நிராகரித்தார் என்று பத்து வாக்காளர்களின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் என்.யோகேந்திரா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles