29.6 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

மூத்த குடிமக்கள் மற்றும் வசதி குறைந்தவர்களுக்கு ஐந்து லட்சம் தடுப்பூசிகள்!

🔥 Views : 5
👁 Reading Now : 28

சிலாங்கூர் மாநிலத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு ஐந்து லட்சம் தடுப்பூசிகளை சிலாங்கூர் மாநில அரசு இலவசமாக வழங்கவுள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
மூத்த குடிமக்கள், குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் மற்றும் பெடுலி ராக்யாட் மக்கள் பரிவுத் திட்டத்தில் பங்கேற்றவர்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.இதரப் பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அவசியத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று செல்வேக்ஸ் திட்டம் தொடர்பான சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட போது அவர் தெரிவித்தார்.
மாநிலத்தில் நோய்த் தொற்றை விரைந்து முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஏதுவாக சிலாங்கூர் அரசு சொந்தமாக தடுப்பூசியை வாங்கும் என்று மந்திரி புசார் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles