
ஒப்பந்த மருத்துவர்களின் கோரிக்கை அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா இன்று தெரிவித்தார்.
சிறந்த மற்றும் பாதுகாப்பான தொழில் வாய்ப்புகளை விரும்பும் சுகாதார அமைச்சின் ஒப்பந்த மருத்துவ ஊழியர்களின் கோரிக்கைகளை அமைச்சரவையில் விவாதிக்கப்படும்
இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கம் விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களையும் பொறுமையாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
“சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களின் நிலை குறித்து, நாங்கள் அமைச்சரவையில் விவாதிப்போம், அமைச்சரவை அறிக்கை தயாரிக்கப்படுகிறது. என்று அவர் சொன்னார்
