30.7 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

110 அங்காடி வியாபாரிகளுக்கு தற்காலிக உரிமம்!

மத்திய செபராங் பிறை,புக்கிட் மெர்தாஜாம் பொதுச் சந்தைக்கு அருகில்
ஜாலான் பாசார் மற்றும் ஜாலான் பூங்கா ராயா பகுதியில் அனுமதியின்றி
வியாபாரம் செய்து வரும் அங்காடிக் கடைகளுக்கு,செபராங் பிறை மாநகர்
மன்றம் தற்காலிக அனுமதியை வழங்கியது.
உரிய அனுமதியும் லைசென்சும் இல்லாமல் செய்லபடும் வியாபாரிகளுக்கு முறையான ஒரு இடத்தை வழங்கும் நோக்கத்தில் எம்பிஎஸ்பி இந்த நடவடிக்கையை
எடுத்துள்ளதாக டத்தோ பண்டார் டத்தோ எஸ்ஆர் ரோஸாலி முகமட்
கூறினார். சுமார் 162 அங்காடி வியாபாரிகள் அனுமதியின்றி செயல்பட்டு
வருகின்றனர். அவர்களில் விண்ணப்பம் செய்த 110
பேருக்கு கடந்த 29 .6 .2021 இல் அதற்கான தற்காலிக உரிமத்தை
வழங்கியதாக அவர் சொன்னார

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles