
ஏழ்மை நிலையிலுள்ள மக்களுக்கு எம் சி ஓ காலம் முடியும் வரை மாதம்தோறும் 1,500 வெள்ளியை உதவி தொகையாக அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.
வரிய நிலையில் உள்ள மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ மாதம்தோறும் இந்த தொகையை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார் .
குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஏழை மக்களுக்கு தலா 1,500 வெள்ளி வழங்கப்பட வேண்டுமென , டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரையை பக்கத்தான் ஹரப்பான் வாழ்க்கை செலவின குழு வரவேற்றுள்ளது.



