
உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதே தமது தலையாய கடமையென
சேவையாற்றி வரும்,பேரா பாரிட் புந்தார் தித்தி சேரோங் தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் ஹஸ்னுல் சுல்கர்னாயின்,தமது தொகுதியிலுள்ள பி40 பிரிவைச் சேர்ந்த இந்தியக் குடும்பங்களுக்கு பொருட்களை வழங்கி உதவினார்.
கோவிட் -19 தொற்றால் அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் முழு அடைப்பு
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் வேலையை இழந்தும்,வேலைக்கு
செல்ல முடியாமலும் எந்தவொரு வருமானமும் இன்றி சிரமப்படும்
குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உதவிப் பொருட்களை
வாசலில் சென்று ஒப்படைத்தார்
.கடந்த பொதுத்தேர்தலில் தமது வெற்றிக்கு
பங்காற்றி உதவிய தொகுதி இந்தியர்களை நான் ஒரு போதும் கைவிட மாட்டேன் என அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.



