
சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசித் திட்டத்தின் மூலம் தடுப்பூசி வாங்குவதற்கு ஐம்பதாயிரம் தொழிற்சாலைகள் முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 16ஆம் தேதி வரை இதற்கான அளிப்பாணைகளை தொழிற்சாலைகள் வழங்கியுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இதன் வழி இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தடுப்பூசி பெறுவதற்கு பதிவு செய்துள்ளனர்.
இத்தகைய ஆதரவின் மூலம் சிலாங்கூர் மாநில நிலையில் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை நாம் விரைந்து மேற்கொள்ளவும் நோய்த் தடுப்பாற்றல் கொண்ட குழுமத்தை உருவாக்கும் முடியும்.
தொழிற்சாலைகளும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான நமது போராட்டத்தில் பங்கேற்க தொழிற்சாலைகள் விரும்புகின்றன.
வேலையிடங்களில் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக அந்நிய நாட்டினர் உள்பட பத்து லட்சம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநில அரசு இருபது லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது என்று அவர் கூறினார்.



