
சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தொழில்துறையினருக்கு தடுப்பூசிகளை விற்பதன் மூலம் மாநில அரசு லாபம் சம்பாதிக்கிறது என்ற சில தரப்பினரின் குற்றச்சாட்டை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மறுத்துள்ளார்.
தொழில்துறையினருக்கு விற்கப்படும் தடுப்பூசியின் வழி கிடைக்கும் தொகை மாநில மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்துவதற்கு உண்டாகும் செலவை ஈடுகட்ட உதவுகிறது.
“தடுப்பூசி என்றால் தடுப்பூசி அடங்கிய புட்டிகளையும் அது வைக்கப்பட்டுள்ள அட்டைப் பெட்டிகளையும் மட்டும் பார்க்கலாகாது. மாறாக, தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 5,000 பணியாளர்கள் மற்றும் தடுப்பூசி மையங்களை செயல்படுத்துவதற்கு ஆகும் செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
