30.3 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

EMCO உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் பொருட்களை வாங்க ஒருவருக்கு மட்டுமே அனுமதி

🔥 Views : 9
👁 Reading Now : 61

நோய்த்தொற்று தாக்கத்தின் எதிரொலியால் சிலாங்கூர் மாநிலத்தில் எட்டு மாவட்டங்களிலும் கோலாலம்பூரில் பல இடங்களில் கடுமையான மக்கள் நடமாட்டம் உத்தரவு அமலுக்கு வருகிறது..
ஜூலை 3ஆம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை மொத்தம் 14 நாட்களுக்கு Emco அமுலில் இருக்கும் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Emco உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை.
வீட்டில் ஒருவர் மட்டுமே பொருட்களை வாங்க அனுமதிக்கப்படுவார்கள். வேலைக்கு செல்வோருக்கு மட்டுமே அனுமதி.
தடுப்பூசி போட்டுக் கொள்ள தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
பொது போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல் செயல்படும். உணவகங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி. பொதுமக்கள் பொட்டலம் மூலம் உணவுகளை வாங்கிச் செல்லலாம்.
மருத்துவமனை, கிளினிக், பார்மசி, மளிகைக் கடைகள் இயங்குவதற்கு அனுமதி.
பசார் போரோங் நள்ளிரவு 12 மணிமுதல் காலை 6 மணி வரை செயல்பட அனுமதி.
கடுமையான மக்கள் நடமாட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தற்காப்பு துறை அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles