
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சமூகத்தின் உதவி சென்றடையும் வகையில் வெள்ளைக் கொடி பறக்க விடும் இயக்கம் தற்போது நாடு முழுவதும் இயங்கி வருகிறது.
சமூக ஈடுபாடு கொண்டவர்கள் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி வருகிறார்கள்.
இதற்கு அரசியல் சாயம் பூசி கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஸி கேட்டுக்கொண்டுள்ளார்.
கஷ்டப்படும் மக்களுக்கு உதவிகள் சென்றடையும் வகையில் இந்த வெள்ளைக்கொடி பிரச்சாரம் அமைந்திருக்கிறது. வீட்டுக்கு வெளியே வெள்ளை கொடியை பறக்க விடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது புனிதமான சமூக நடவடிக்கையாகும்.
ஆகவே இதற்கு அரசியல் சாயம் பூசும் தரப்பினரை அவர் வன்மையாக சாடினார்.



