
Emco மக்கள் நடமாட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தடுப்பூசி மையங்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
ஒரு காரில் மூவர் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக போலீஸ் படைத் தலைவர் அக்ரில் சனி தெரிவித்தார்.
தடுப்பூசி மையங்களுக்கு செல்பவர்கள் மைஜேத்திரா மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களை காட்ட வேண்டும்..
தேசிய பாதுகாப்பு மன்றத்தின் Sop விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இன்று தொடங்கி ஜூலை 16ஆம் தேதி வரை சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் பல இடங்களில் Emco உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
