
நாட்டில் நோய்தொற்று மிகவும் மோசம் அடைந்திருக்கும் வேளையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் மருத்துவமனைகளில் கட்டில்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கட்டிலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் படையெடுப்பால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் நீண்ட நேரமாக சக்கர நாற்காலிகளில் அமர்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.



