34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

வெள்ளைக் கொடிகளை ஏற்றும் குடும்பங்களுக்கு உதவி வரூகிறோம் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் – எம்பிக்கள் அறிவிப்பு

நோய்த் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டூ
தங்கள் வீடுகளில் வெள்ளைக் கொடிகளை ஏற்றி வைக்கும் மக்களுக்கு உதவி வருகிறோம் என்று சிலாங்கூர் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
உதவி தேவைப்படுவோரை எளிதில் அடையாளம் காண்பதில் இந்த வெள்ளைக் கொடி இயக்கம் பெரிதும் துணை புரிவதாக கிள்ளான் நாடாளமன்ற உறுப்பினர் சாந்தியாகோ, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர். சிவராசா மற்றும் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ ஆகியோர் தெரிவித்தனர்.
இவர்களுக்கு கண்டிப்பாக உதவிகளை செய்து வருகிறோம்.
உதவி தேவைப்படுவோர் கண்டிப்பாக தங்கள் வீடுகளில் வெள்ளைக் கொடிகளை ஏற்றி வைக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர.
பூச்சோங்கில் வெள்ளைக் கொடிகளை ஏற்றிவைத்த ஏழு குடும்பங்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்கி இருக்கிறோம் என்று கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
செந்தோசா தொகுதியில் வெள்ளைக் கொடிகளை ஏற்றியவர்களுக்கு உணவு, குழந்தைகளுக்கான பால் மாவு உள்ளிட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன என்று சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் குறிப்பிட்டார். கிள்ளான், கம்போங் ஜாவாவில் உள்ள இரு வசதி குறைந்த குடும்பங்களை அடையாளம் காண இந்த இயக்கம் துணை புரிந்தது.
மேலும் பலர் நேரடியாக சேவை மையத்துக்கு வந்து உணவு பொருட்களை பெற்றுச் செல்கிறார்கள்.
செந்தோசா தொகுதி சேவையை மையத்தின் வாயிலக தினசரி மாலை 4.00 தொடங்கி 120 உணவுப் பொட்டலங்களை வசதி குறைந்தவர்களுக்கு விநியோகித்து வருகிறோம்.
இது தவிர அரசு சாரா அமைப்புடன் இணைந்து கம்போங் ஜாவா பகுதியில் 300 பேருக்கு மதிய உணவை ஏற்பாடு செய்து தருகிறோம் என்றும் அவர் சொன்னார்.
இந்த வெள்ளைக் கொடி இயக்கத்தை தாம் வரவேற்பதாக கூறிய கோத்தா கெமூனிங் சட்டமன்ற உறுப்பினர் வி. கணபதி ராவ் இதன் மூலம் மக்களை எளிதில் அடையாளம் காண முடிகிறது என்றார் அவர்.
கஷ்டப்படும் மக்கள் தங்கள் வீடுகளில் வெள்ளைக் கொடிகளை ஏற்றிவைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் அவர்களுக்கு உரிய நேரத்தில் உதவிகள் வந்து சேரும் என்றார் அவர்.
புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் கூறுகையில் உதவி தேவைப்படுது அனைத்து மக்களுக்கும் உதவி புரிந்து வருகிறோம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles