
Emco மக்கள் நடமாட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் சிலாங்கூர் மாநிலத்தில் 34 இடங்களில் முள் வேலி கம்பிகள் அமைக்கப்படாது என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி தெரிவித்தார்.
இன்று தொடங்கி ஜூலை 16ஆம் தேதி வரை சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் பல இடங்களில் Emco உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் 34 இடங்களிலும் கோலாலம்பூரில் 14 இடங்களிலும் Emco உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் Emco அமுலில் இருக்கும் பகுதிகளில் 14,000 போலீஸ்காரர்கள் கடமையில் இருப்பார்கள் என்று அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் Sop விதிமுறைகளை பின்பற்றி நடக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
