29.9 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

அடுத்த கட்ட நகர்வு என்ன? முக்கிய தலைவர்களின் ரகசிய சந்திப்பு!

🔥 Views : 9
👁 Reading Now : 69

மலேசியாவில் அரசியல் நிலவரம் மீண்டும் சூடு பிடித்திருக்கும் வேலையில் பெரிகாத்தான் நேசனல் கூட்டணியில் இருந்து அம்னோ வெளியேற போவதாக பரபரப்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
அம்னோவின் இந்த அதிரடி முடிவால் இனி மலேசிய அரசியலில் அடுத்து என்ன நடக்குமா கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே நேற்று ஜாலான் பிலாமி என்ற இடத்தில் பங்களா வீட்டில் ரகசிய சந்திப்பு கூட்டம் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.
அம்னோ தலைவரை ஆதரிக்காத 3 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இரண்டு துணை அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ கார்கள் உட்பட பல கார்கள் அந்த இடத்தில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்ட அரசியல் நகர்வை நோக்கி இந்த ரகசிய சந்திப்பு கூட்டம் நடைபெற்றிருக்கலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.
தற்போது அம்னோவிடம் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles