29.9 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

கோயில்கள் உடைபடும் விவாகரத்தில் இந்து சங்கம் மவுனம் காப்பது ஏன்?

🔥 Views : 6
👁 Reading Now : 60

நாட்டில் பல இடங்களில் கோவில்கள் உடைபடும் போது இந்து சங்கம் அதை ஏன் தட்டிக் கேட்பதில்லை என்ற கேள்விகளை மக்கள் முன் வைத்துள்ளனர்.
அண்மையில் சுபாங்கில் அகோர காளியம்மன் ஆலயம் உடைபட்டது.
இந்த ஆலயமும் இந்து சங்கத்தினல் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆலய நிர்வாகம் கூறுகிறது.
அப்படியானால்
இந்த ஆலயத்தை அகற்றும்படி நிலா மாவட்ட இலாகா நோட்டீஸ் கொடுத்தது இந்து சங்கத்திற்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். இந்த ஆலயத்தை காப்பாற்றவும் உடைப்பதில் இருந்து தடுத்து நிறுத்தவும் ஏன் இந்து சங்கம் போராடவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனிடையே எந்த அடிப்படையில் ஒரு ஆலய நிர்வாகத்தை இந்து சங்கம் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்கிறது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் கேள்வி எழுப்பினார்.
ஆலயம் அமைந்திருக்கும் நிலம் யாருடையது மற்றும் ஆகம முறைப்படி கோபுரங்களுடன் ஆலயம் கட்டப்பட்டு தினசரி பூஜைகளும் நடைபெறுகிறதா என்பதை இந்து சங்கம் உறுதிப்படுத்திய பின்னர் அந்த ஆலய நிர்வாகத்தை இந்து சங்கம் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்கிறதா என்று அவர் வினா எழுப்பினார்.
இந்து சங்கத்தின் கீழ் பதிவு பெற்ற ஆலயங்களை காக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்து சங்கத்திற்கு இருக்கிறது.
அந்த வகையில் இது போன்ற ஆலயங்கள் உடைப்பதை ஏன் இந்து சங்கம் தடுத்து நிறுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles