

தேவைப்படும் நேரத்தில் இல்லையென்று சொல்லாமல ,உடனுக்குடன் உதவிகளை வழங்கி வரும் பேரா பாரிட் புந்தார் தொகுதி மஇகா,தற்போது கோவிட் -19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியக் குடும்பங்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கியது.வேலையையும்,வருமானத்தையும் இழந்து தவிக்கும் தாமான் செமாராக்கைச் 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதாக தொகுதி தலைவர் முத்தையா தெரிவித்தார்.
தொகுதி மஇகா ஏற்பாட்டில், பாரிட் புந்தார் தொகுதி அம்னோ தலைவர் டத்தோ அபு பாக்கார் பின் மாட் அலியின் அன்பளிப்பில் இந்த பொருட்களை வழங்கியதாக தொகுதி செயலாளர் சந்திரகாந்தன் காளிமுத்து கூறினார்
.இந்நிகழ்வில் தொகுதியின் கிளைப் பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டனர்.



