
வரும் ஜூலை 26ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுவதாக பிரதமர் துறை அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.
ஜூலை 26 முதல் 29 வரை மற்றும் ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் மொத்தம் ஐந்து தினங்களுக்கு கூட்டம் நடைபெறும்.
ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை மூன்று தினங்களுக்கு மேலவை கூட்டம் நடைபெறும்.
மாட்சிமை தங்கிய மாமனரின் ஆலோசனைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தை கூட்டுவது முடிவு காணப்பட்டதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நாடக மன்றம் கூட்டப்படுகிறது



