33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

பி40 குடும்பங்களுக்கு பாகான் செராய் மக்கள் சக்தி கட்சி உதவி

🔥 Views : 10
👁 Reading Now : 25

பேரா பாகான் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் வசிக்கும் பி40 பிரிவைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்படும் இவர்களுக்கு சமையல் பொருட்களை வழங்கியதாக பாகான் செராய் தொகுதி மக்கள் கட்சித் தலைவர் விஸ்வநாதன் கூறினார்.
இங்குள்ள பாதிரியார் கம்பம்,ஜாலான் சியாக்காப் உட்பட சில குடியிருப்புப் பகுதிகளிலும் இந்த உதவிகளை நேரில் சென்று வழங்கியதாக தெரிவித்தார்.
தொகுதி மகளிர் பிரிவினரும் தம்முடன் இணைந்து செயல்பட்டதாக கூறிய அவர்,அண்மையில் தமது பொறுப்பாளர்களுடன் தொகுதிக்கு வருகைப் புரிந்த மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன்,இந்த உதவிப் பொருட்களை ஒப்படைத்தார் என விஸ்வநாதன் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles