33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

2,000 குடும்பங்களுக்கு சார்லஸ் சந்தியாகோ பேருதவி

🔥 Views : 11
👁 Reading Now : 35

நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறார்.
நாட்டில் நோய்ததொற்று தாக்கம் ஏற்பட்டது முதல் இது நாள் வரை தனது தொகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு அவர் தொடர்ந்து உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
வருமானம் மற்றும் வேலை இழந்த மலேசியர்கள் இன்னமும் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.
மக்களுக்கு உதவ வேண்டிய அரசாங்கம் ஒரு தோல்வி கண்ட அரசாங்கமாக இருக்கிறது.
இதனால் மக்கள் உணவுக்காக கஷ்டப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
கிள்ளான் நாடாளுமன்ற உணவு வங்கி திட்டத்தின் மூலம் நேற்று 2,000 பேருக்கு காய்கறிகளையும் மீன்களையும் வழங்கியதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles