
EMCO அமுலில் இருக்கும் பிஜேஎஸ் மெந்தாரி கோர்ட் 1,553 குடியிருப்பாளர்களுக்கு பைசர் பயோஎன்டெக் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இங்கு நடமாடும் சுகாதார கிளினிக் மற்றும் கோவிட்-19 மதிப்பீட்டு மையம் போன்ற வசதிகளை சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா வாயிலாக மாநில அரசு ஏற்படுத்தித் தந்துள்ளதாக என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
EMCO பகுதியில் அமைக்கப்பட்ட முதலாவது கோவிட்-19 மதிப்பீட்டு மையம் இதுவாகும்.
இங்கு மேற்கொள்ளப்படும் சோதனையில் நோய்த் தாக்கம் அதிகம் உள்ளவர்கள் மேல் கிசிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். லேசான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள்..
வரும் வெள்ளிக்கிழமைக்குள் சுமார் எட்டாயிரம் பேருக்கு தடுப்பூசியைச் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



