24.6 C
Kuala Lumpur
Thursday, October 1, 2026

Vetri

மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்குப் போதுமான படுக்கைகள் இல்லை

🔥 Views : 38
👁 Reading Now : 56

நாட்டில் அரசாங்க பொது மருத்துவமனைகளில், கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது அதிகமாக இருப்பதால், மோசமாக நோயுற்ற பல நோயாளிகள், மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) படுக்கை பெற காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இருந்தாலும், மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நாட்டில் தற்போது நோய்த்தொற்று மோசமாக இருக்கிறது. இதனால் அதிகமான நோய்த்தொற்று நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் மற்ற நோயாளிகளுக்கு போதுமான படுக்கைகள் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles