28.5 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

ஜொகூர் புக்கிட் பாசிர் தொகுதியில் 100 குடும்பங்களுக்கு உதவிகள்

🔥 Views : 9
👁 Reading Now : 20

ஜொகூர் புக்கிட் பாசிர் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளரும் பாகோ தொகுதி மக்கள் நீதிக் கட்சியின் தலைவருமான சுப்ரமணி புக்கிட் பாசிர், தெமியாங், பாகோ, பஞ்சோர், பாகோ ஜெயா மற்றும் லெங்ஙாவில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு இன்று உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார்.
பாகோ மற்றும் புக்கிட் பாசிர் தொகுதியில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் இனம் மதம் பேதமின்றி உதவி வருகிறோம் என்று சுப்பிரமணி கூறினார்..
இந்த சவாலான காலக்கட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலை செய்திகள் மிகவும் வேதனையளிக்கின்றது.ஆகையால், உதவி தேவைப்படுபவர்கள் தயங்காமல் எப்பொழுது வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம். அதுமட்டுமல்லாது, இந்த உணவு வங்கி திட்டம் இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles