31.8 C
Kuala Lumpur
Sunday, June 21, 2026

Vetri

அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? காய்களை நகர்த்த தொடங்கினார் அம்னோ தலைவர்

🔥 Views : 14
👁 Reading Now : 52

நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்ந்து சூடுபிடித்து இருக்கும் வேலையில் வரும் ஜூலை 26ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அம்னோ தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வகையில் காய்களை நகர்த்த தொடங்கியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தை கூட்டும் படி அம்னோ வழங்கிய 14 நாள் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது
டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி நேற்று மாலையில் அம்னோ முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் உட்பட பல அம்னோ தலைவர்கள் இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த சந்திப்பு குறித்த மேல் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
அம்னோ எம்.பி.க்கள் அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்பது அம்னோவின் கோரிக்கையாகும்.
அம்னோ ஆதரவை விலக்கிக் கொள்ள நேர்ந்தால் ஆட்சி கவிழும்.
கட்சி எடுக்கும் முடிவை ஆதரிப்பதற்காக டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடிக்கு பெரும்பாலான அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வ உறுதிமொழிகளை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது..
அந்த வகையில் இனி வரும் நாட்கள் மிகவும் பரபரப்பாக இருக்கலாம் என்று வர்ணிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles