29 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் அம்னோ வெளியேறிவிடும்!

🔥 Views : 9
👁 Reading Now : 22

பெரிக்காத்தான நேஷனல் அரசாங்கத்திலிருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் அம்னோ வெளியேறிவிடும் என்று அதன் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ புவாட் ஸார்காசி இன்று உறுதிப்படுத்தினார்.
நடப்பு அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேற உச்சமன்ற உறுப்பினர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது உள்ளனர்.
டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடிக்கு அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவை புலப்படுத்தி உள்ளனர்.
மேலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் நடப்பு அரசாங்கத்திலிருந்து வெளியிடுவதற்கும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.
இது தொடர்பில் மிக விரைவில் இணையம்வழி கூட்டம் நடத்தி தீர்க்கமான முடிவு காணப்படும் என்று அவர் சொன்னார்.
இதனிடையே நேற்று பரபரப்பாக நடைபெற்ற கூட்டத்தில் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி மற்றும் தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உட்பட பலரும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திலிருந்து இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஐந்து அம்னோ எம்பிக்கள் வெளியேற முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles