28.5 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

சொக்சோ சம்பள உதவித் திட்டத்தின் கீழ் 27 லட்சம் தொழிலாளர்களுக்கு 1,567 கோடி வெள்ளி

🔥 Views : 10
👁 Reading Now : 37

சொக்சோ சம்பள உதவித் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு 1,567 கோடி வெள்ளியை வழங்கப் பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் வழி 27 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்களும் 333,533 முதலாளிகளும் பயனடைந்துள்ளனர் என்று சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ முகமது அஸ்மான் அஜிஸ் முகமது தெரிவித்தார்.
பி.எஸ்.யு. 4.0 திட்டத்திற்கு ஆகஸ்டு முதல் தேதி தொடங்கி அக்டோபர் 30 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
இதற்கான நிதி பகிர்ந்தளிப்பு இவ்வாண்டு நவம்பர் முதல் அடுத்தாண்டு பிப்ரவரி வரை மேற்கொள்ளப்படும்.
சம்பள வேறுபாடின்றி அனைத்து ஊழியர்களுக்கும் மாதம் 600 வெள்ளி உதவித் தொகை கோரி முதலாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles