27.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

அம்னோ தலைவர் இல்லத்தில் பரபரப்பை காணோம்

🔥 Views : 8
👁 Reading Now : 59

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி இல்லத்தில் நிலவரம் அமைதியாகவே இருந்தது..
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கான ஆதரவை அம்னோ மீட்டுக் கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்து இன்று காலை அவரது இல்லத்தில் சில முக்கிய சந்திப்புகள் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
சட்டத்துறை தலைவர், சில அமைச்சர்கள் உட்பட அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் அச்சந்திப்பில் கலந்து கொண்டதாக நம்பப்படுகிறது. இதைத் தொடர்ந்து டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி இல்லத்தில் கட்சி கூட்டம் ஏதும் நடத்தப்படுமா என்ற தகவலை தெரிந்து கொள்ள ஊடகவியாளர்கள் அங்கு ஒன்றுகூடினர்.
ஆனால் அங்கே நிலைமை எந்தவொரு ஆரவாரமும் இன்றி அமைதியாக இருந்தது.
இருந்தபோதிலும் மாலை வரை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அங்கு காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles