
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு 32 அம்னோ எம்பிக்கள் ஆதரவு இருப்பதாக டத்தோஸ்ரீ நஸ்ரி தெரிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தல் வரை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பது என்று அம்னோ பொது பேரவையில் முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவுக்கு ஏற்ப தற்போது 32 அம்னோ எம்பிக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதாக அவர் சொன்னார்.
தற்போது அம்னோவில் 38 எம்பிக்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



