32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

சிலாங்கூர் அரசின் 500 வெள்ளி உதவித்தொகைக்கு 4,264 பேரு குறைந்தவர்கள் விண்ணப்பம்

🔥 Views : 9
👁 Reading Now : 29

கித்தா சிலாங்கூர் உதவி திட்டத்தின் கீழ் 500 வெள்ளி உதவித்தொகைக்கு 4,264 பேறு குறைந்தவர் கள் விண்ணப்பம் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கித்தா சிலாங்கூர் உதவி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிக்கு உதவ 6 லட்சம் வெள்ளியை சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
இந்த 500 வெள்ளி சிறப்பு உதவித் தொகைக்கு 4,264 விண்ணப்பங்களை பெற்றுள்ளோம் என்று யாவாஸ் தலைமை நிர்வாகி கான் பெய் நீய் கூறினார்.
இந்த திட்டத்திற்கு தாங்கள் நிர்ணயித்திருந்த 1,200 விண்ணப்பங்களையும் தாண்டி நான்காயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கூறிய அவர், அந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. யார் முழுமையான ஆவணங்களை முதலில் அனுப்பினார்கள் என்ற அடிப்படையில் இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
சில பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளதால் பெரும்பாலோர் ஆவணங்களை முழுமையாக அனுப்ப இயலாத நிலையில் உள்ளனர் என்றார் அவர்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக விண்ணப்பங்கள் கிடைத்துள்ள போதிலும் இம்மாத இறுதி வரை கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles