
அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கம் எங்களுக்கு இல்லை. மேலும் அம்னோவுக்கு பதவி வெறியும் கிடையாது என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி அறிவித்தார்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான நேஷனல் அரசாங்கம் தோல்வி கண்டிருக்கிறது.
அந்த வகையில் அவருக்கு வழங்கி வந்த ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்டது.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை வெளியேற்றம் முயற்சியானது அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கம் கொண்டது அல்ல என்று டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி அறிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் தோல்விகளை சுமக்கும் கட்சி அம்னோ அல்ல.
மக்களுக்காக போராடும் ஒரு கட்சியாகவே அம்னோ இன்றுவரை விளங்குகிறது என்றார் அவர்.



