
நாட்டில் தொடர்ந்து நோய்த்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இன்று நோய்த் தொற்று பெரும் உச்சத்தைத் தொட்டுள்ளது.
இன்று புதிதாக 9,180 புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் 4,400 புகார்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கோலாலம்பூரில் 2,271 புகார்கள் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 899 புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.



