
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறார்.
கடந்த மூன்று பொதுத்தேர்தல்களில் பூச்சோங் நாடாளுமன்ற தொகுதியில் அமோக வெற்றி பெற்று வரும் இவர் தொகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் தீர்வு கண்டு வருகிறார்.
மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்திருக்கும் மக்களுக்கு இரவு பகல் பாராது உதவிகளை வழங்கி வருகிறார்.
கோபிந்த் சிங் டியோ தொகுதி மக்களுக்கு செய்து வரும் உதவிகள் அவரது ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
பூச்சோங் மக்களுக்கு உதவாமல் எங்கே போனார் கோபிந்த் சிங் டியோ என்று கேள்வி எழுப்பியிருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் முதலில் கூட்டரசு பிரதேசத்தில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவிகளை வழங்கட்டும்.
கூட்டரசு பிரதேசத்தில் மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
கூட்டரசு பிரதேச அமைச்சரின் சிறப்பு அதிகாரி என்று கூறிக் கொள்ளும் இவர் முதலில் அந்த மாநிலத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் உணவு கூடைகளை வாங்க 3 லட்சம் வெள்ளி மட்டுமே வழங்கப்பட்டது.
ஒரு உணவுகூடை 100 வெள்ளி என்றால் 3 லட்சம் வெள்ளிக்கு 3,000 உணவுக் கூடைகளை மட்டுமே வாங்க முடியும்.
பூச்சோங் நாடாளுமன்றம் மிகப் பெரிய தொகுதி. இதுவரை பூச்சோங் தொகுதி மக்களுக்கு ஆயிரக்கணக்கில் உணவுக் கூடைகளை இவர் வழங்கி இருக்கிறார்.
தனது சொந்த பணத்தில் ஏழை மக்களுக்கு கோபிந்த் சிங் டியோ உதவி வருகிறார் என்பது இங்குள்ள மக்களுக்கு தெரியும்.
மலிவு விளம்பரம் தேடுவதை விடுத்து கஷ்டப்படும் மக்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் உதவினால் நல்லது என்று செனட்டர் சுரேஷ் சிங் சுட்டிக்காட்டினார்.
கோபிந்த் சிங் டியோ எங்கும் ஓடி ஒளியவில்லை. அணி தாவவும் இல்லை. பூச்சோங்கில்தான் இருக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.



