29.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

SOP விதிமுறைகளை மீறியதற்காக 108 தொழிற்சாலை மூடல்

🔥 Views : 23
👁 Reading Now : 61

நாட்டில் கடந்த இரு தினங்களில் எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய 108 தொழிற்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டதாக தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறும் தொழிற்சலைகள் மற்றும் வணிக மையங்களுக்கு எதிராக வர்த்தகத்தை மூடுவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக மையங்கள் விஷயத்தில் இனி ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்றும் அவர் எச்சரித்தார்.

நாம் கோவிட்-19 நோயை முடிவுக்கு கொண்டு வரும் வரை நாம் நடத்தவிருக்கும் போரின் ஒரு பகுதியாக இந்த கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தன்மூப்பாக செயல்படும் செயல்படும் தரப்பினர் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று அவர் மேலும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles