
இவ்வாண்டு ஜூன் முதல் இம்மாதத் தொடக்கம் வரை சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஐந்து கர்ப்பிணித் தாய்மார்கள் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தனர்.
இது கடந்த மே மாதத்திலிருந்து அதிகரித்து வந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேரின் குழந்தைகள், அறுவைச் சிகிச்சை மூலம் முன்கூட்டியே மீட்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை இறந்துபோனது, மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது, அத்தாயார் மயக்க நிலையில் இருந்தார்,” என்று பெயர் கூற மறுத்த ஒரு சுகாதார ஊழியர் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் தொடக்கம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நோய்த்தொற்று அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் மட்டும், குறைந்தது 100 கர்ப்பிணி பெண் நோயாளிகளுக்கு மருத்துவமனை சிகிச்சை அளித்தது. ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது சக ஊழியர்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.



