
ரவூப் வட்டாரத்தில் உள்ள மூசா கிங் டூரியான் தோட்டத்தில் 15,000 டூரியான் மரங்களை பகாங் மாநில அரசு வெட்டி சாய்த்திருப்பது அதன் ஆணவத்தை காட்டுகிறது என்று மூசா கிங் டூரியான் அலயான்ஸ் தலைவர் வில்சன் சாங் சாடினார்.
கடந்த ஒன்பது நாட்களில் இந்த 15, 000 மூசா கிங் டுரியான் மரங்களை பகாங் மாநில அரசு வெட்டி சாய்த்து உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
டூரியான் தோட்டக்காரர்கள் இந்த மூசா கிங் டூரியான் மரங்களை நம்பி வாழ்ந்து வந்தனர்.
250 ஹெக்டர் நிலப்பரப்பில் மூசா கிங் டூரியான் மரங்கள் பயிரிடப்பட்டன.
ஆனால் இப்போது இந்த டுரியான் மரங்களை பகாங் மாநில அரசு அடியோடு வெட்டி சாய்த்து உள்ளது என்றார் அவர்.



