
நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவ நாட்டிலுள்ள ஆலயங்கள் களம் இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது. அந்த வகையில் செராஸ் இரண்டரை மைலில் வீற்றிருக்கும் ஸ்ரீ தோகையடி விநாயகர் ஆலயம் 30 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை அன்பளிப்பு செய்தது. ஆலயத் தலைவர் பாலகிருஷ்ணன் சபாபதி, துணைத்தலைவர் ராஜசேகரன் கந்தையா மற்றும் ஆலய கமிட்டி உறுப்பினர் எஸ்டி பாலா உட்பட பலரும் பொது மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
கடந்த வார இறுதியில் 30 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டிலும் வசதி குறைந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டதாக எஸ்டி பாலா தெரிவித்தார்.



