
கெடா மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையிலான சமயப் புதிர் போட்டியில் புக்கிட் செலாரோங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றனர்.
இயங்களை வாயிலாக நடத்தப்பட்ட இப்போட்டியில் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவரான லவினேஸ் ராவ் த/பெ பாஸ்கர் ராவ் இரண்டாம் நிலையில் வெற்றிப் பெற்றார்.
மற்றொரு மாணவரான டிவனேஸ் ராவ் த/பெ பாஸ்கர் ராவ் மூன்றாம் நிலையில் வெற்றிப் பெற்றார்.
இரண்டாம் நிலையில் வென்ற மாணவருக்கு 150 வெள்ளியும்,மூன்றாம் நிலை மாணவருக்கு 100 வெள்ளியும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஊக்குவிப்பு பரிசாக வழங்கப்பட்டது என பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஏழுமலை தெரிவித்தார்.

இப்போட்டியில் கெடா மாநிலத்திலிருந்து மொத்தம் 1,559 மாணவர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வென்று பள்ளிக்கு பெருமைச் சேர்த்த இவ்விரு மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பிலும்,பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.



