
கடுமையான மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்களை கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் ஜூன் 1ஆம் தேதி முதல் இந்நாள் வரை 5, 600க்கும் அதிகமான குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டுள்ளதாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் குறிப்பிட்டார்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் வேலை, வருமானம் இழந்து வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
இத்தகைய சூழலில் மக்களுக்கு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உதவிப் பொட்டலங்கள் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படுகிறது.
இன்னமும் உதவி தேவைப்படும் மக்களை அடையாளம் கண்டு உதவி வருகிறோம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.



