31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

தேசியக் கூட்டணியின் தோல்விகள் வெட்கக்கேடானது டாக்டர் இராமசாமி சாடல்

🔥 Views : 8
👁 Reading Now : 44

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கோவிட் -19 தொற்று மற்றும் பொருளாதாரப்
பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு தோல்விக்கு தோல்வி மேல் கண்டு வருவது வெட்கக்கேடாக உள்ளது என பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பி.இராமசாமி சாடினார்.
குறிப்பாக நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சனைக்கு முந்தைய தேசிய முன்னணி, அம்னோ அரசாங்கத்தின் கடன் தான் இன்று சுமையாக இருப்பதாக நிதியமைச்சர் தெங்கு சப்ருல் கூறியிருப்பத்துக் குறித்து அவர் கருத்துரைத்தார்.
முந்தைய அரசாங்கம் தவறு செய்திருந்தால் ஏன் அந்த அரசாங்கத்துடன் கூட்டு வைத்து ஆட்சியை அமைத்தீர்கள் என்றார்.
பின்புற வாசலில் வந்து நுழைந்த இந்த அரசாங்கம் மற்றவர்களின் ஆலோசனைகளை செவிமடுக்காமல் செயல்படுவதால்,இன்றைய அரசாங்கத்தின் தோல்வி தெளிவாக காட்டுவதாக சொன்னார்.
ஆகையால் இப்போது நிகழ்ந்துள்ள பழுதுகளை சீர்படுத்த பொறுப்புள்ளவர்களிடம் அரசாங்கத்தை ஒப்படைத்து விட்டு வெளியேறுவதே சிறந்தது என டாக்டர் பி.இராமசாமி நினைவுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles