
போதைப் பொருளுக்கு எதிராக பினாங்கு போலீசார் மேற்கொண்ட அதிரடி
சோதனை நடவடிக்கையில்,காதலர்கள் உட்பட நான்கு பேரை கைது செய்து
29 .1 கிலோகிராம் ஷாபு,8 .6 கிலோகிராம் ஹெரோயின்,4 .3 கிலோகிராம்
ஹெரோயின் பேஸ்,52.1 கிலோகிராம் கெபின் வகை போதைப் பொருட்களை
கைப்பற்றியதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் சுஹாய்லி
தெரிவித்தார்.
மேலும் ஒரு கைதுப்பாக்கி,13 தோட்டாக்கள்,தங்க நகைகள்,
760,000 வெள்ளி ரொக்கம் ஆகிவற்றையும் கைப்பற்றியதாக சொன்னார்.6
கார்கள், ஒரு அதிவேக மோட்டார் சைக்கிள்,லோரி மற்றும் சைக்கிள்
ஆகியவையும் இந்நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டது.
பிறை சை லெங் பார்க்,தென் செபராங் பிறை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் கையது செய்யப்பட்ட 25 வயதிலிருந்து 42 வயதுக்குட்பட்ட
அவர்கள் அனைவரும் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக
டத்தோ முகமட் சுஹாய்லி நிருபர்களிடம் கூறினார்.



