
நோய்த்தொற்று தாக்கத்தினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நாட்டிலுள்ள டாக்ஸி ஓட்டுனர்கள் வருமானம் இன்றி தவிக்கிறார்கள்.
தற்போது கடுமையான மக்கள் நடமாட்டம் உத்தரவாதம் டாக்ஸி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று சிலாங்கூர், கோலாலம்பூர் ஜூவாரா லீமா இந்திய டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கத் தலைவர் காந்தி சந்திரசேகரன் தெரிவித்தார்.
ஒரு நாளைக்கு 10 வெள்ளியை கூட சம்பாதிக்க முடியாத அளவுக்கு டாக்ஸி ஓட்டுனர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இதனால் டாக்ஸி க்கான வாடகை பணத்தை செலுத்த முடியவில்லை. வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருக்கிறோம்.
எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க பணம் தேவைப்படுகிறது.
வருமானம் இல்லாததால் டாக்ஸி ஓட்டுனர்கள் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொது இயக்கங்கள் எங்கள் மீதும் கருணை காட்டவேண்டும். எங்களுக்கும் குடும்பம் இருப்பதால் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்க முன்வரவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
எங்களுக்கு உதவ முன்வரும் பொது இயக்கங்கள் தலைவர் காந்தி சந்திரசேகரன் 011-40049508, செயலாளர் பிரேம் நசீர் 010-2261811 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
