
4 காவல் கைதிகள் மரணம் தொடர்பில் சுஹாகாம் எனப்படும் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருவதாக சுஹாகாம் ஆணையாளர் ஜெரால்ட் ஜோசப் தெரிவித்தார்.
காவல் கைதிகள் ரூபன் கருணாகரன், எஸ். சிவபாலன், சுரேந்திரன் மற்றும் நேப்பாள பிரஜை ஆகியோர் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜோகூர் குளுவாங் சிறைச்சாலையில் நேப்பாள நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் மரணமுற்றார்.
மே 27ஆம் தேதி ஜோகூர் சிம்பாங் ரெங்காமில் சுரேந்திரன் காலமானார். மே 20ஆம் தேதி கோம்பாங் போலீஸ் நிலையத்தில் சிவபாலன் காலமானார்.
இப்போது ரூபன் கருணாகரன் என்பவரும் அண்மையில் காலமானார்.
இவ்வாண்டில் மொத்தம் 12 காவல் கைதிகள் மரணம் அடைந்திருப்பதாக மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது.



