29 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

டுரியான் தோட்டம் அழிப்பு!எங்களுக்கு சம்பந்தமும் இல்லை

🔥 Views : 21
👁 Reading Now : 34

ரவூப்பில், பாரம்பரிய டுரியான் விவசாயிகளால் பயிரிடப்பட்ட 15,000 மூசா கிங் டுரியான் மரங்களை வெட்டிச்சாய்த்த பஹாங் வனத்துறையின் நடவடிக்கைக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ராயல் பஹாங் டுரியான் ரிசோர்சஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விஷயத்தில், “சில தரப்பினரால்” எறியப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தகுந்த நேரத்தில் தீர்ப்போம் என்றும் அந்நிறுவனம் கூறியது.
சில தரப்பினர் இந்த நிறுவனத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றனர். எங்களை அவமதிக்கவும் அவதூறு செய்யவும் விரும்பும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் அது எச்சரித்துள்ளது.
பகாங் மாநில நிலங்களை ஆக்கிரமித்ததாகக் கூறி, ரவூப் புக்கிட் தாலாம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், சுமார் 250 ஏக்கரில் டுரியான் பழத்தோட்டத்தில், 15,000 முசாங் கிங் மரங்களை, ஒன்பது நாட்களுக்குள் பஹாங் வனத்துறை வெட்டி அகற்றியதைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles