
கெடா கூலிம் வட்டாரத்தில் பேரு குறைந்த 28 வயதே நிரம்பிய இளைஞருக்கு பாடாங் செராய் நாடாளமன்ற உறுப்பினர் கருப்பையா என்று நேரில் சென்று உதவி புரிந்தார். பிறந்தது முதல் நடக்கும் சக்தியை இழந்த இந்த இளைஞருக்கு தேவையான உதவிகளை கருப்பையா வழங்கினார். அடுத்த வாரம் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இந்த இளைஞருக்கு தேவையான உதவிகளை இவர் வழங்கி உள்ளார். கெடா உட்பட தனது தொகுதியில் சிறப்பான சேவைகளை செய்துவரும் கருப்பையா, உதவி தேவைப்படும் மக்களை நாடிச் சென்று தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.




