
கூட்டரசு பிரதேச அமைச்சராக இருந்தபோது தட்மன்சோரி ஹால்டிங்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்கின் மூலமாக அசெட் காயாமாஸ் நிறுவன இயக்குநரிடம் இருபது லட்சம் வெள்ளி லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இருந்து டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இந்த குற்றத்திற்காக இவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் 12 மாத சிறையும் 20 லட்சம் வெள்ளி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தண்டனையை எதிர்த்து தெங்கு அட்னான் புத்ராஜெயா அப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதி டத்தோ சுராயா ஓத்மான் தலைமையில் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு 2-1 என்ற பெரும்பான்மையில் தெங்கு அட்னானை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது.
